“சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க வேண்டும்”... நாவடக்கம் இன்றி திரியும் திமுகவினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்- அண்ணாமலை

 
aNnamalai aNnamalai

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க வேண்டும், பழக்கவழக்கங்களை மாற்றக்கூடாது என அமைச்சர் ரகுபதி பேசியதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

annamalai

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், “சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.


மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, மாண்புமிகு நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர்.நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.