பாஜக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்- அண்ணாமலை அதிரடி
Jun 23, 2024, 11:41 IST1719123098265
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்க்கண்ட மாவட்ட நிர்வாகிகள் அவர்கள் வகித்து வரும் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதன்படி, திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர்கள் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


