நேர்மையான ஆட்சிக்கும் குடும்ப, ஊழல் அரசியலுக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது- அண்ணாமலை

 
 அண்ணாமலை

வரும் பாராளுமன்றத் தேர்தல், பிரதமர் மோடியின் நேர்மையான நல்லாட்சிக்கும், திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணியின் குடும்ப, ஊழல் அரசியலுக்கும் இடையே நடக்கவிருக்கும் தேர்தல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான, தமிழகத்தின் தொன்மையான பகுதிகளின் ஒன்றான கடலூர் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில், அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி, தன்னெழுச்சியாகத் திரண்டு வந்த பொதுமக்கள் ஆதரவால் சிறப்புற்றது.வரும் பாராளுமன்றத் தேர்தல், பிரதமர் மோடியின் நேர்மையான நல்லாட்சிக்கும், திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணியின் குடும்ப, ஊழல் அரசியலுக்கும் இடையே நடக்கவிருக்கும் தேர்தல் என்பதை, பொதுமக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

Image

நேர்மையான, ஊழலற்ற அரசியல் மாற்றம் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், பாஜகவால்தான் அதனை நிறைவேற்ற முடியும் என்ற உறுதியும் பொதுமக்களிடையே இருப்பதை, மக்களின் பேராதரவில் உணர முடிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.