அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்கக் கோரி போராட களமிறங்கும் பாஜக!

 
annamalai

தமிழகத்தில் உள்ள கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்கக் கோரி அக்.7ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி, எஞ்சியிருக்கும் நான்கு நாட்களில் மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அனைத்து நாட்களும் கோவில்களை திறக்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. எனவே, தமிழக அரசை கண்டித்து வரும் 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

annamalai

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளி, கல்லூரிகள், உணவகங்கள் என அனைத்தும் திறந்திருக்கும் போது வழிபாட்டுத் தலங்களை பட்டு மூடுவது வஞ்சக எண்ணம் ஆகத்தான் இருக்க முடியும்.  கோவில்களை திறக்காததற்கு கொரோனா தொற்றை காரணம் கூறுவது நகைப்புக்குரியது. கோயிலையே நம்பியிருக்கும் சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 7ம் தேதி காலை முக்கிய கோவில்களின் முன் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. அதன் பிறகும் கோவில்களை எல்லா நாட்களிலும் திறக்கவில்லை என்றால் மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.