ஓட்டுக்கு G Pay மூலம் பணம் அனுப்பும் அண்ணாமலை - திமுக புகார்!!

 
TN TN

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை G Pay மூலம் பணம் அனுப்பி வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர் திமுக நிர்வாகிகள்.

Annamalai

இதுதொடர்பாக கோவை திமுக வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் .பழனிச்சாமி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதில், நான் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளராக உள்ளேன். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு. அண்ணாமலை அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக அவரது தேர்தல் பணிமனையில் இருந்து வாக்காளர்களுக்கு அலைபேசியின் மூலம் அழைத்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு GPay மூலம் பணம் அனுப்பி வருகிறார். 

tn

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வேளியேறி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நட்டத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை நாடாளுமன்ற பாஜாக தேர்தல் அலுவலகமான அவினாசி சாலை அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைசேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரியும் GPay மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகிறார்.  என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.