#BJP நாளை வெளியாகும் பாஜக வேட்பாளர் பட்டியல்!

 
bjp

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக தமிழகத்தில் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்றுடன் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BJP

இன்று தாமக மற்றும் ஓபிஎஸ் அணியுடன் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
 பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தனர்.
நாளை பாஜகவின் தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.