பங்காரு அடிகளாரின் மனைவி உடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!!

 
tn

பங்காரு அடிகளாரின் மனைவி லஷ்மி அம்மாளை  பாஜக நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.

tnமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் கடந்த 19ஆம் தேதி மறைந்தார். அவருக்கு வயது 82.  ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970 ஆம் ஆண்டு நிறுவி கோயில் கருவறைக்கு சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறை ஏற்படுத்திய இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.

tn

இந்நிலையில் பங்காரு அடிகளாரின் மனைவி லக்‌ஷ்மி உடன் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு நடத்தியுள்ளனர். பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி அனுப்பிய இரங்கல் கடிதத்தை வழங்கினர்.