“அண்ணாமலையை பற்றி பேச கொங்கு ஈஸ்வரனுக்கு அருகதை இல்லை”

 
அண்ணாமலையை பற்றி பேச கொங்கு ஈஸ்வரனுக்கு அருகதை இல்லை- நாகராஜ்

அண்ணாமலை குறித்து பேச அறுகதையற்றவர் சென்னை E.R.ஈஸ்வரன். கொங்கு மக்களை வைத்து, திமுகவின் சட்டமன்ற உறுப்பினராகி கொங்குநாட்டிற்குச் செய்ததை பட்டியலிட முடியுமாE.R.ஈஸ்வரனால்? என பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K. நாகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exclusive: மத்திய அமைச்சர்களை பொம்மைகளாக வைத்துள்ளார் மோடி... தகிக்கும் கொங்கு  ஈஸ்வரன் | Kmdk general secretary kongu eswaran says, Modi should give  independence to central ministers ...

இதுதொடர்பாக பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K. நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய பேட்டியில் E.R.ஈஸ்வரன், அண்ணாமலை கொங்குநாட்டிற்கு என்ன செய்தார்? என்கிறார். IPS  அதிகாரியாக இருந்து தமிழ்நாட்டின் அரசியல் அவலநிலை கண்டு, திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக, அரசியல் களமிறங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. பாஜகவிற்கு கை இல்லை,கால் இல்லை என்று கூறிய திராவிடக்கட்சிகளுக்கு மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து, அண்ணா திமுகவை பல இடங்களில் டெபாசிட் இழக்கச்செய்து 18% வாக்குவங்கியை தமிழகத்தில் பெற்றுக்காட்டியவர் அண்ணாமலை அவர்கள்.

திருந்துங்கள் சூர்யா..! இல்லை என்றால்..? பாஜக பகிரங்க எச்சரிக்கை! | BJP  kisan morcha state president G.k.Nagaraj criticize actor surya - Tamil  Oneindia

E.R.ஈஸ்வரனோ கொங்குமண்டலத்தில் தொண்டை கிழிய பேசி,கொங்கு மக்கள் கூட்டத்தைக் கூட்டி,வஞ்சக வலை வீசி,கொங்கு இனம்  கோட்டையில் கொடியேற்றும் என சூளுரைத்து,கள் இறக்க சிறை நிரப்பும் போராட்டம் என நாடகம் நடத்தி, கைத்தறி, விசைத்தறி காப்பேன், ஆனைமலை-நல்லாறு,பாண்டியாறு-புன்னம்புலா தண்ணீர் கொங்குமண்டலத்தில் தேனாறாக ஓடும் எனக்கூறி,   நாமக்கல்லில் லாரி தொழில்,பல்லடத்தில் கோழித்தொழில் காப்பேன் என வீரவசனம் பேசி,விவசாய முதல்வர்.எடப்பாடி பழனிசாமியை ஏளனம் செய்து திமுகவில் உறுப்பினராகி,ஐக்கியமாகி திமுக சின்னத்தில் வெற்றி பெற்று  ஒரு எம்.பியுடன்,தான் ஒரு எம்.எல்.ஏ-வாகவும் கடந்த ஆறு ஆண்டுகளில்  கொங்குநாட்டிற்குச் செய்த ஒரு நல்ல காரியத்தை ER.ஈஸ்வரன் அவர்களால் பட்டியலிட முடியுமா? கீழ்பவானி வாய்க்கால் பிரச்சனைக்கும்,அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்கும் அறப்போராட்டம் நடத்தி,அரசைப் பணிய வைத்து வெற்றிகண்டது திரு.அண்ணாமலை தலைமையிலான பாஜக. கொங்கு மக்களின் கோரிக்கைகளை மறந்து சட்டசபையில் திமுகவின் புகழ்பாடி,பதவி சுயநலத்தில் சுருங்கிப்போய் கொங்குமக்களால் புறக்கணிக்கப்பட ER.ஈஸ்வரனுக்கு அண்ணாமலை பற்றிப்பேச அருகதையில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.