"நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

 
stalin

NEETன் பலன் ZERO என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

neet

நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும் எம்.டி, எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3வது சுற்றுக் கலந்தாய்வில் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.


இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில்,   நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய பாஜக அரசு ஒப்புக்கொண்டது.  ஹீரோ மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவம் மேற்படிப்பில் சேரலாம் என்று அறிவிப்பின் மூலம் நீட் தேர்வு அர்த்தமற்றது என அவர்களே  ஒப்புக்கொண்டனர் . இது பயிற்சி மையம் மற்றும் கட்டணத்திற்கான சம்பிரதாயமாக மாறிவிட்டது.  உண்மையான தகுதிக்கான அளவுகோல் இல்லை.  விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியும் ,மனம் தளராத ஒன்றிய அரசு இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  நீட் என்று ஆயுதத்தால் பல உயிர்களைக் கொன்ற பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.