திமுகவின் அஸ்தமனத்திலே தான் தமிழகத்திற்கு விடியலே இருக்கிறது- ஹெச்.ராஜா
திமுக தலைவரின் மகளும், அவருடைய கட்சியினரும் நடத்தும் CBSE பள்ளிகளில் மும்மொழி பாடம் கற்பிக்கலாம்? ஆனால் அரசு பள்ளிகளில் மும்மொழி பாடத்தை மாணவர்கள் கற்கக்கூடாதா? என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஹெச். ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில், “புதிய தேசிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையை அறிவுறுத்துகிறது. அதன் முதன்மையான நோக்கம் மாணவர்களின் கற்றல் திறனும் உலகளாவிய பரந்துபட்ட வேகமான வளர்ச்சி நிறைந்த காலகட்டத்தில் தங்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் சுய முன்னேற்றத்திற்கு பன்மொழிப்புலமை அவசியம் என்கிற கால சூழலை கருத்தில் கொண்டு கூறப்படுவது தான். ஆனால் தமிழக முதல்வரோ மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளைத் தவிர தமிழகத்தில் வேறெந்த மொழிக்கும் அனுமதி இல்லை என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது என்கிறார் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்!? பிறகு எந்த அடிப்படையில் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் திமுக ஆட்சிக்கு வந்தால் உருது மொழியை தமிழகத்தில் கட்டாய பாடத்திட்டமாக்குவோம் என வாக்குறுதி அளித்தார்?
தமிழகத்தில் ஏற்கனவே CBSE பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் நடைமுறையில் இருந்து தான் வருகிறது. அவ்வளவு ஏன் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் புதல்வி திருமதி.செந்தாமரை சபரீசன் நடத்தி வரும் வேளச்சேரி சன்ஷைன் மான்டசோரி பள்ளி முதல் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் 43 பேர் நடத்தி வரும் CBSE பள்ளிகளின் பட்டியலை நான் ஏற்கனவே இரண்டு முறை வெளியிட்டுள்ளேன். திமுக தலைவரின் மகளும், அவருடைய கட்சியினரும் நடத்தும் CBSE பள்ளிகளில் மும்மொழி பாடம் கற்பிக்கலாம்? ஆனால் அரசு பள்ளிகளில் மும்மொழி பாடத்தை மாணவர்கள் கற்கக்கூடாதா? தற்போதுள்ள தேசிய கொள்கை 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது 1992 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை திரு.மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் காங்கிரஸூடன் சேர்ந்து திமுக அங்கம் வகித்த கூட்டணி ஆட்சி காலத்தில் தேசிய கல்விக் கொள்கையில் மாநில மொழி, சர்வதேச அலுவல் மொழி மூன்றாவதாக ஹிந்தி மொழி, நான்காவதாக சமஸ்கிருத மொழி இருந்தது. காங்கிரஸூடன் கூட்டணியில் இருந்த காலத்தில் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த திமுக இப்போது திடீரென தூக்கத்தில் இருந்தது விழித்தது போல பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. திரு.கே.கஸ்தூரிரங்கன் அவர்கள் தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்து மத்திய அரசு தற்போது முன்மொழிந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி பாடத்தில் முதல் மொழி அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி, இரண்டாவது மொழி சர்வதேச அலுவல் தொடர்பு மொழி மூன்றாவதாக பாரத மொழிகளுள் ஏதேனும் ஒரு மொழி என்பது தான் அதன் சாராம்சம்.
தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளுக்கும் அடுத்து அந்நிய மொழியான அரேபி மொழி உருதுவை கட்டாய பாடத்திட்டமாக்குவோம் என 2016 ஆம் தேர்தலில் வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று இந்திய மொழிகளுள் ஏதேனும் ஒரு மொழியை மூன்றாவது மொழியாக மாணவர்கள் கற்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காரணம் என்ன? மூன்றாவது ஒரு மொழி வந்தால் தமிழ்மொழி அழிந்து போகும் என திராவிட தற்குறிகளும் அவர்களுடைய சிந்தனை ஒட்டுண்ணிகளாக இருக்கும் அறிவிலிகளும் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை என்ன தெரியுமா? தமிழ் வளர்த்தாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் ... 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 10 வகுப்பு தமிழ் பாடத்தில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 47,000. 2023 - 2024 கல்வியாண்டில் 10 வகுப்பு தமிழ் பாடத்தில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 36,000. இந்த லட்சணத்தில் தான் திமுக ஆட்சியில் தாய்மொழியின் வளர்ச்சி நிலையும், தாய்மொழி பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி நிலையும் இருக்கிறது.
புதிய தேசிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையை அறிவுறுத்துகிறது. அதன் முதன்மையான நோக்கம் மாணவர்களின் கற்றல் திறனும் உலகளாவிய பரந்துபட்ட வேகமான வளர்ச்சி நிறைந்த காலகட்டத்தில் தங்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் சுய முன்னேற்றத்திற்கு பன்மொழிப்புலமை அவசியம் என்கிற கால சூழலை கருத்தில்… pic.twitter.com/6IzEcVrzQT
— H Raja (@HRajaBJP) February 16, 2025
புதிய தேசிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையை அறிவுறுத்துகிறது. அதன் முதன்மையான நோக்கம் மாணவர்களின் கற்றல் திறனும் உலகளாவிய பரந்துபட்ட வேகமான வளர்ச்சி நிறைந்த காலகட்டத்தில் தங்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் சுய முன்னேற்றத்திற்கு பன்மொழிப்புலமை அவசியம் என்கிற கால சூழலை கருத்தில்… pic.twitter.com/6IzEcVrzQT
— H Raja (@HRajaBJP) February 16, 2025
திமுக அவர்களுடைய சிந்தனை வழிகாட்டியான தமிழ் விரோதி ஈவெராவின் வழியில் செல்வதால் தான் தமிழகத்தில் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் காட்டுமிராண்டிகள், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, சனியன் தமிழை விட்டொழி உன் வீட்டுக்காரியிடமும், வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசு என தமிழ் மொழியை தரம் தாழ்த்தி, ஆங்கில மொழிக்கு சிரம் தாழ்த்தி அந்நிய மோகத்தை வளர்த்த ஈவெராவின் சிந்தனையோடு மும்மொழிக் கொள்கையை நிந்தனை செய்யும் திமுகவுக்கு மாணவர்கள் நலனில் எவ்வித அக்கறையும் இல்லை. தமிழக மாணவர்களின் அறிவு வளர்ச்சியின் மீதும், எதிர்கால சுயவளர்ச்சியின் மீதும் Chief Minister of Tamil Nadu திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், திமுகவுக்கும் எள்ளளவும் எவ்வித அக்கறையும் இல்லை என்பதே உண்மை.
புதிய தேசிய கல்விக்கொள்கையின் படி மும்மொழி கொள்கையை ஏற்காத தமிழக அரசு, தமிழக அரசு இரு மொழிகளை மட்டுமே கற்பித்து வரும் நிலையில் பள்ளிகளில் மூன்றாவது மொழிக்கான பாடத்திட்டம் தயாரிக்கவும், பாடநூல்கள் அச்சேற்றவும், அதற்கான ஆசிரியர்கள் நியமனம் செய்யவும், அவர்களுக்கான ஊதியம் வழங்கவும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்கின்ற நிதியை கோருவது எந்த வகையில் நியாயம்? தேசிய கல்விக்கொள்கை மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தைத் தரும்!! திமுகவின் திராவிட சிந்தனை தமிழகத்திற்கு ஏமாற்றத்தையே தரும்!! திமுகவின் அஸ்தமனத்திலே தான் தமிழகத்திற்கு விடியலே இருக்கிறது!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


