விஜய் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை; குழப்பத்தில் இருக்கிறார்- எல்.முருகன்

 
L.Murugan L.Murugan

விஜய் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை  என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “தவெக தலைவர் விஜய் குழப்ப நிலையில் இருக்கிறார். விஜய்யின் பேச்சில் தெளிவு இல்லை. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் விஜய் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. விஜய் தேர்ந்த பயிற்சி எடுத்து மாநாட்டில் பேசி இருந்தாலும் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. குழப்பமான சூழலை எதிர்கொண்டிருக்கிறார். திமுக போலி திராவிட மாடல்
ஆட்சி நடத்துகிறது, அதனால் தான் குடும்ப அரசியல் குறித்து விஜய் பேசியுள்ளார்.

தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என்றிருந்தால் வரவேற்றிருப்போம். திராவிடம், தமிழ் தேசியம், இரு மொழிக் கொள்கை என சொல்லியிருக்கிறார். இருந்தாலும் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.