திமுகவில் இருந்து பாஜகவில் சிலர் இணைவர் - எல்.முருகன்
அமலாக்கத்துறை என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு,தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “திமுகவில் இருந்து மிகப்பெரிய தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளானர் என மத்திய இணையவுள்ளனர். திமுகவில் உள்ள சிலருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள். இந்தியாவில் பல மாநிலங்கள் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அமலாக்கத்துறை என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு,தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.
நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ரூ.800 கோடி செலவில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பொலிவு செய்யப்படும். விமான நிலையத்திற்கு இணையாக எழும்பூர் ரயில் நிலைய பணிகள் செய்யப்படவுள்ளன” என்றார்.


