"ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது”- எல்.முருகன்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று உடனடியாக தமிழக முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து, தேவையான உதவிகளை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்கள் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று இரவு நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க சம்பவம். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. பல பேர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளார்கள். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று உடனடியாக தமிழக முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து, தேவையான உதவிகளை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் வந்த பிறகு அது தொடர்பாகச் சொல்கிறோம்” என்றார்.


