ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினோம் - பாஜக

 
bjp

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியதாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அடுத்ததாக ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு நிகழ்ந்துள்ளது.  ஈபிஎஸ்-ஐ சந்தித்த நிலையில் தற்போது ஓபிஎஸ் உடன் சந்திப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சந்திப்புக்கு பின்னர் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சி.டி. ரவி பேசியதை அண்ணாமலை தமிழில் மொழிபெயர்த்து பேசினார். 

ops

சிடி ரவி கூறியதாவது: இணைந்து செயல்படுமாறு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஒன்றிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என ஓபிஎஸ், இபிஎஸிடம் எடுத்துரைத்தோம். ஈரோடு இடைத்தேர்தலில் ஒரே அணியாக, வேட்பாளராக நிறுத்த வேண்டும்  என்பதே பாரதிய ஜனதாவின் நிலைப்பாடாக உள்ளது. எனினும், வரும் 7ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால், பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பத குறித்து ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும்.  திமுகவை எதிர்க்க அதிமுகவில் உறுதியான, நிலையான வேட்பாளர் வேண்டும். அதனால் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவதே ஆரோக்கியமானதாக  இருக்கும். இவ்வாறு குறிப்பிட்டார்.