4 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு.. நிலம்பூரை கைப்பற்றிய காங்கிரஸ்..!

 
Kerala Congress Kerala Congress


 நான்கு மாநிலங்களில் 5  சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.  

குஜராத், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது.  இதில் குஜராத்தின் விசாவதார் மற்றும் காடி  ஆகிய 2 தொகுதிகளுக்கும், கேரளாவின் நிலம்பூர், மேற்கு சங்கத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு என மொத்தம் 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

election

இதில் காளிகஞ்ச் தொகுதியில் 69.85 சதவீத வாக்குகளும், நிலம்பூர் தொகுதியில் 70.76 சதவீத வாக்குகளும், குஜராத்தின் விசாவதார் தொகுதியில் 54.61% மற்றும் காடியில் 54.49% வாக்குகளும், லூதியானா மேற்கில் 40.07சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.  இந்த 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  

இந்த 5 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்திருக்கிறது.  இதில் கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.  அங்கு 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  நிலம்புரில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்டி வேட்பாளர் ஸ்வராஜ் தோல்வியை தழுவியுள்ளார்.  மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஸ்வராஜுக்கு 66,159 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யாடன் சவுகத்துக்கு  77,087 வாக்குகளும் கிடைத்துள்ளன.  நிலம்பூரில் 8,562 வாக்குகள் மட்டுமே பெற்று பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.