“ஓட்டு மெஷினில் தாமரை மட்டுமே கண்ணுக்கு தெரியவேண்டும்”- பாஜக எம்எல்ஏ
தாமரை துண்டை அனைவரும் போட்டு இருக்கணும். மக்களுக்கு சின்னம் சென்றடைய வேண்டும். பாஜகவை வளர்க்க வேண்டும். ஓட்டு மெஷினில் தாமரை மட்டுமே கண்ணுக்கு தெரியவேண்டும் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவியேற்பு விழாவில் பாஜக எம்எல்ஏ ஜான் குமார் பேசினார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக ராமலிங்கம் பதியேற்பு விழாவில் பேசிய ஜான் குமார் எம்எல்ஏ, புதுச்சேரியில். ஆயிரம் ரூபாய் மகளிர் வாங்க மோடி காரணம். கடந்த ஆட்சியில் பணத்துக்கு திண்டாடினார்கள். கேட்க, கேட்க பிரதமர் மோடி அள்ளி அள்ளி தருகிறார். நம் மாநிலத்தில் 7000 கோடி வருமானம் வருது. மீதியுள்ள 6000 கோடியை பிரதமர் தான் தருகிறார். பாஜக, மோடி தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். தாமரை துண்டை அனைவரும் போட்டு இருக்கணும். மக்களுக்கு சின்னம் சென்றடைய வேண்டும். பாஜகவை வளர்க்கவேண்டும். ஓட்டு மெஷினில் தாமரை மட்டுமே கண்ணுக்கு தெரியவேண்டும் என பிரசாரம் செய்ய வேண்டும். இங்குள்ள நாலாயிரம் பேர், நாலு லட்சம் பேராக தெரிகிறார்கள். 2026ல் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும். கடன் இல்லா மாநிலமாக்கவேண்டும் என்றார்.


