"அரசியல் செய்வதற்காக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" - நயினார் நாகேந்திரன் சாடல்!!

 
ttn

அரசியல் செய்வதற்காக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, "நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசால் இரண்டாம் முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தை இன்று மீண்டும் சட்டப் பேரவையில் திமுக அரசு கொண்டுவந்துள்ளது. இது தேவையானதா? நீட் தேர்வால் சமூக நீதிக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். ஆனால் இன்று நீட் தேர்வு மூலமாக அனைத்து சமூகத்திற்குமான  சமூகநீதி காக்கப்பட்டுள்ளது. திமுக அரசு அரசியல் லாபத்திற்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது இது ஏற்புடையது அல்ல எனவே பாஜக இதனை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது" என்றார். 

tn

தொடர்ந்து பேசிய அவர் ,  அரசியல் கண்துடைப்புக்காகவே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கும் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை.ஏ.கே.ராஜன் குழுவின்  அறிக்கை  ஒரு தலைப் பட்சமாகவே உள்ளது. அதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்துவதை  தவிர்க்கவே மத்திய அரசால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இது மத்திய காங்கிரஸ் திமுக கூட்டணி  ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டதாக இருந்தாலும்  இதன் மூலம் மக்களுக்கு நன்மை இருக்கும் என்றால் அதனை வரவேற்க வேண்டும்" என்றார்.