நாடாளுமன்ற தேர்தலுக்காகவே கிறிஸ்துவ ஆதிதிராவிடர்கள் தீர்மானம் - வானதி சீனிவாசன் பேட்டி

 
Vanathi seenivasan

நாடாளுமன்ற தேர்தலுக்காக கிறிஸ்துவ ஆதிதிராவிடர்கள் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் பட்டியிலன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களுக்கு அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப்பெற அரசமைப்புச்சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

தனித்தீர்மானத்தில் வானதி ஸ்ரீனிவாசன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  இதனைதொடர்ந்து சட்டசபை வெளியே பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்காக கிறிஸ்துவ ஆதிதிராவிடம் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் கிறிஸ்துவ மக்களை ஏமாற்றும் வகையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்காக கிறிஸ்துவ ஆதிதிராவிடம் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.