"மத்திய அரசின் மீது பழி போடுவதே மாநில அரசின் வழக்கம்" - வானதி சீனிவாசன் எம்எல்ஏ

 
Vanathi seenivasan

நாளை தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட உள்ளார்.

vanathi srinivasan

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கார்பன் சமநிலை என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனுடைய பொறுப்பு. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் கார்பன் சமநிலை சட்டமன்ற அலுவலகமாக மாற்றுவதற்கான முன்னெடுப்பை இன்று தொடங்குகிறோம்;

vanathi--srinivas-3

நாளை தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட உள்ளார்.ஹெலிகாப்டர் அனுப்பிவைத்து உணவு வழங்கிய மத்திய அரசின் படைகள் தான் தூத்துக்குடி மாநகருக்கு உதவியாக இருந்திருக்கிறது; ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது, மாநில அரசு மத்திய அரசின் மீது பழி போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்;

மக்களின் வேதனைக்கும், தேவைக்கும் உடனடியாக தீர்வை கொடுத்தது மத்திய அரசு என்று குறிப்பிட்டுள்ளார்.