நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி எங்கள் கையில் உள்ளதே- வானதி சீனிவாசன்

 
‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு! ‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

பாஜகவுக்கு அண்ணாமலை  எழுச்சியை தந்துள்ளார் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பேரிய எழுச்சியை அண்ணாமலை தந்துள்ளார். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாமல் இருக்கலாம்.. ஆனால் மத்தியில் அமைந்திருப்பது எங்களது ஆட்சி. கோவை நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாக வாக்குகளை மக்கள் பாஜகவுக்கு தந்துள்ளனர். பாஜகவுக்கு எதிரான மனநிலையை தமிழக முதல்வர் மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி எங்கள் கையில் உள்ளதே. அடுத்த 5 ஆண்டுகள் எங்களுடைய ஆட்சி எந்த சிக்கலும் இல்லாமல் சரியாக நடக்கும். திமுகவின் கூட்டணியில் இருந்தவர்கள் எவ்வளவு நாள் சட்டமன்ற தேர்தல் வரை கூட்டணியில் இருப்பார்கள் என நாங்களும் பார்க்கிறோம். 

தமிழகத்தில் இடைத்தேர்தலை எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள் என்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். பணபலத்தையும், அதிகார பலத்தையும் எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதையும் மீறி மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம்” என்றார்.