யாரை காப்பாற்ற இவ்வளவு விரைவில் ஞானசேகரனுக்கு தீர்ப்பு- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன் முக ஸ்டாலின் வானதி சீனிவாசன் முக ஸ்டாலின்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஞானசேகரனுக்கு விரைவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி


பெரம்பலூரில் தனியார் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற ராணி ஸ்ரீ அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., “சென்னை அண்ணா பல்கலைகழக மாணவியின் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசியல் கட்சியினருக்கு கிடைத்துள்ள வெற்றி. இந்த வழக்கில் இவ்வளவு விரைவாக தீர்ப்பு வழங்கியுள்ளது வரவேற்கதக்கது. ஆனால் யாரை காப்பாற்ற இவ்வளவு விரைவாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற சந்தேகமும் எழுகிறது. மேலும் தமிழகத்தில் இதேபோல் பெண்களுக்கு எதிரான அனைத்து குற்ற வழக்குகளுக்கும் விரைவில் தீர்ப்பு வழங்க முடியுமா?

தற்போது கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை  கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையினை தமிழக சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஆன்மீக எழுச்சியாக பாஜகவின் முருகன் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெறும். ஏழை மாணவர்கள் கல்வி உரிமை சட்டத்தின் மூலம் தனியார்  பள்ளிகளில் சேர தமிழக பள்ளிக் கல்வித்துறை முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.