தீவிரவாத தாக்குதலின் போது பெண்களிடம் போதுமான வீரம் இல்லை - பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

 
mp mp

பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களிடம் போதுமான தைரியம் இல்லை என "பாஜக மாநிலங்களவை உறுப்பினர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களிடம் போதுமான தைரியம் இல்லை என "பாஜக மாநிலங்களவை உறுப்பினர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள், தீவிரவாதிகளிடம் கைகூப்பி மன்றாடியதற்கு பதிலாக, அவர்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும். அந்தப் பெண்களிடம் போதுமான வீரம் மற்றும் மனப்பக்குவம் இல்லை என கூறினார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.