ராகுல் காந்தியின் MP பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்..!!

 
1 1

லோக்சபா நேற்று கூடியதும் பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் முன்வைத்தார்.

 

அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினரும் விமர்சித்ததால் சபையில் அனல் பறந்தது.'அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, பாரத மாதாவை அந்நாட்டிற்கு மத்திய அரசு விற்றுவிட்டது,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ் சாட்டியதால், பா.ஜ.,வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், பாஜ எம்பி நிஷிகாந்த் துபே ,' லோக்சபாவில் எந்த ஆதாரமும் இல்லாமல் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் சுமத்தி உள்ளதாகவும்,அவரது பதவியை பறிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் கொண்டு வந்துள்ளேன்.

வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement