தமிழ்நாட்டில் 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை தொடங்குவோம் - நயினார் நாகேந்திரன்

 
Nainar Nainar

நீட் தேர்வு எழுத செல்லும்  மாணவிகளை தலை முடியை அவிழ்க்க சொல்வது தேவையில்லாத விஷயம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Who is Nainar Nagendran, the AIADMK turncoat all set to replace K Annamalai  as Tamil Nadu BJP chief | Mint

நெல்லை பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார்  நாகேந்திரன், “இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது ஏற்பட்ட சந்தோசத்தை விட இன்று அடைந்த சந்தோஷம் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா என்று சாந்தி அடையும். பிரதமர் மோடி தனி நபர் அல்ல 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். 9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


காங்கிரஸ் முதல்வராக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எந்த நாடு வருத்தமடைந்தாலும், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி. திமுக, அதிமுக,பாஜக எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும். 2026 தேர்தலில் வெற்றிவேல் வீரவேல் எனும் ஆபரேஷனை ஆரம்பிப்போம். விசிக தலைவர் திருமாவளவன் என்னுடைய நெருங்கிய நண்பர். நான் இதுவரை அவரிடம் கூட்டணி குறித்து பேசவில்லை. மற்றவர்கள் யாரும் பேசினார்களா என தெரியவில்லை. நீட் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் மாணவிகளை தலை முடியை அவிழ்க்க சொல்வது தேவையில்லாத ஒரு விஷயம். அதே சமயத்தில் சில எலக்ட்ரானிக் பட்டன்களும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கிறது” என்றார்.