“அண்ணாமலைக்கும், எனக்கும் சண்டையை மூட்டுகிறீர்கள்”- நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்தது நட்பு ரீதியிலானது தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நயினார்


நடிகை ராதிகாவின் தாயார் கீதா உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது  இல்லத்திற்கு நேரடியாக சென்ற பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், நடிகை ராதிகா மற்றும் சரத்குமாரிடம்  ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், “நடிகவேள் என்றால் எம்.ஆர்.ராதா தான்..கீதா ராதா மறைவையொட்டி இன்று நேரில் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளேன். சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் திரையுலகில் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளனர். முதல்வர் மத்திய அரசின் திட்டத்தை என்றாவது வரவேற்று பேசி உள்ளாரா? 

ரேஷன் கடையில் வழங்க கூடிய அனைத்து பொருட்களும் மத்திய அரசுவழங்குவது தான்‌. ஜி.எஸ்.டி. என்பது மத்திய அரசின் வரி‌விதிப்பு இல்லை. மாநில நிதி அமைச்சர் அடங்கிய‌குழு தான். மக்களுக்காக இன்று 5 மற்றும் 18 சதவீதம் மட்டும் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது.இன்று ஜி.எஸ்.டி. வரி‌குறைப்பு காரணமாக இன்று டிவி உள்ளிட்ட விலைகள் வெகுவாக குறைந்துள்ளது. விமான நிலையங்கள், நான்கு வழிச்சாலை, விமான‌ போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக்கும் மத்திய அரசு நிதி வழங்குகிறது. நட்பு ரீதியாகவே அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவியை அண்ணாமலை சந்தித்துள்ளார். வருகிற 6-ந் தேதி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார். பீகார் மாநிலத்தில் எப்படி போலி வாக்காளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதோ அதேபோன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் போலி வாக்காளர்களை அதிகமாக சேர்த்துள்ளனர். கராத்தே தியாகராஜன் தான் சென்னை முழுவதும் போராட்டங்களை முன்னின்று நடத்த இருக்கிறார்” என்றார்.

முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியின் கூட்டணிக்கு எதிராக வெளியே சென்ற கட்சியினரை சந்தித்து விமர்சனம் செய்கிறாரே, நீங்கள் தலைவரா அல்லது அண்ணாமலை தலைவரா என்ற விமர்சனம் வருகிறதே என்ற கேள்விக்கு, இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமென்பதல்ல, நீங்கள் கேட்கும் கேள்வி சரியல்ல. எங்களுக்குள் சண்டை மூட்டுவது போல உள்ளது. இது மாதிரி கேள்வி வேண்டாம் எனக் கூறினார். கூட்டணி குறித்து விமர்சிக்கிறவர்களை நேரில் சென்று சந்திக்கின்றாரே என்ற கேள்விக்கு, அவர் சொல்லும் போது நட்பு ரீதியாக சந்திப்பதாக சொல்லி இருக்கின்றார். எனக்கும் எல்லா கட்சியிலும் நட்பு ரீதியாக ஆள் இருக்கிறார்கள், என மழுப்பலான பதிலளித்தார்.