“செங்கோட்டையன் வெளியேறியதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை”- நயினார் நாகேந்திரன்

 
ச் ச்

செங்கோட்டையன் வெளியேறியதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்துள்ளார். அதிமுகவுக்கு தனி வாக்கு வங்கி உள்ளது, ஆகவே செங்கோட்டையன் வெளியேறியதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல் பாஜக கூட்டணிக்கும் பாதிப்பில்லை. எத்தனை அணிகள் அமைந்தாலும் எங்கள் அணிதான் ஆட்சி அமைக்கும். ஒருவர் கட்சியில் இருந்து வெளியே போனால் அவருடன் சேர்ந்து வாக்கு வங்கியும் போகுமா என்ன? அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு குறையவில்லை. அதிமுக பல சிக்கல்களை ஏற்கனவே சந்தித்துள்ளது. கடைசியாக ஏற்பட்ட சலசலப்பின் போது தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அளித்த ஆதரவில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார் தற்போது தேர்தல் வரும் நேரத்தில் மீண்டும் அப்படி ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் சென்றதால் எங்கள் கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை.

இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார் விஜய் , அவர் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லையே. எடுத்தவுடனே உலகத்தையே தாண்டுவேன் என சொல்வது எப்படி? தேர்தலில் நின்று செல்வாக்கையும், சக்தியையும் நிரூபித்தப்பிறகு நானும் ஒத்துக்கொள்கிறேன்” என்றார்.