“யாரையும் கட்டாயப்படுத்தி கூட்டணியில் இணைக்க முடியாது”- நயினார் நாகேந்திரன்

 
ச் ச்

யாரையும் கட்டாயப்படுத்தி கட்சியில் கூட்டணியில் இணைக்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “நேற்று முன்தினம் அமித்ஷா புதுக்கோட்டையில் நடைபெற்ற மிகப்பெரிய பிரமாண்டமான பாஜகவின் தமிழகம் தலை நிமிர பயணத்தின் பங்கேற்று பல தகவல்களை கூறிவிட்டு சென்றிருக்கிறார். அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக மோடி அரசு உயர்த்தி தந்திருக்கிறது. இதன் சம்பளம் ஒரு வாரத்திற்கு ஒருமுறை கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் எங்கெல்லாம் ஓட்டைகள் இருந்ததோ  அதையெல்லாம் அடைத்து இருக்கிறோம். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் என்று கூறிய இரு நீதிபதிகள் கூறிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எதுக்கு எடுத்தாலும் அரசு நீதிமன்றத்திற்கு செல்கிறது. மத கலவரத்தை தூண்டும் விதமாக அரசு செயல்படுகிறது. நீதிபதிகள் இந்த விவகாரத்தில் அரசு அரசியல் செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு ஓய்வூதியம் ஜீவோ கூட என்னும் போடவில்லை. ஜூன் மாதம் வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். ஜூன் மாதம் யார் முதலமைச்சராக இருப்பார்கள். இதை நம்பி ஜாக்டா ஜியோ அமைப்பினர் எப்படி போராட்டத்தை வாபஸ் பெற்றார்கள் என்று தெரியவில்லை. மக்களின் முதல்வராக தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக இருக்க கூடிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார். பீகாரில் பாஜக மெஜாரிட்டியாக வந்தோம். ஆனால் நித்திஷ் குமாரை முதல் அமைச்சராக வைத்திருக்கிறோம். டிவிகேஎஸ் இளங்கோவன் திமுகவில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அவர் பேசலாம் காங்கிரஸ் கட்சியில் இருக்க கூடிய பிரச்சனையை அவர் எப்படி பேச முடியும். திமுகவினர் போலி மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறார்கள்.எனக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. தமிழ்நாட்டின் நலன் கருதி எடுக்கப்படக்கூடிய டிடிவி தினகரன் முடிவுகள் வரவேற்கத்தக்கது.யாரையும் கட்டாயப்படுத்தி கூட்டணியில் இணைக்க முடியாது. நம்முடைய கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகிறது” என்றார்.