“ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே இருப்பது உட்கட்சி பிரச்சனை”- நயினார் நாகேந்திரன்

 
nainar nainar

எடப்பாடி பழனிச்சாமி- ஓ பன்னீர் செல்வம் இடையே உள்ளது உட்கட்சி பிரச்சனை என தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார்.

Nainar

 
"குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்" தூத்துக்குடியில் இன்று சொற்பொழிவு ஆற்ற இருக்கின்றார்.. இவரை சந்திப்பதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி வருகை தந்து அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், “ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்சனை அவர்களுடைய உட்கட்சி பிரச்சனை. அதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக அமைந்து இருக்கிறது. பல கட்சிகள் இன்னும் வந்து சேரும். 

10 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசு கொடுத்து இருக்கிறது. பிள்ளை, வெள்ளாளர், இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று அரசு வழக்கு போட்டிருக்கிறது. மத்திய அரசு எந்த திட்டம் அறிவித்தாலும் அதனை எதிர்த்து மாநில அரசு நீதிமன்றம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றார்கள். குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சியை மக்கள் புரிந்து இருக்கின்றார்கள். தேர்தல் வர இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். எங்களுடைய கூட்டணி நெருக்கம் ஏற்பட்டு மிகப்பெரிய மெகா கூட்டணியாக மாறும்” என்றார்.