“தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை! கட்சியின் தலைவர் மேடையில் டான்ஸ் ஆடிட்டு இருக்கார்”- நயினார் நாகேந்திரன்

 
NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை, கட்சியின் தலைவராக இருந்து கொண்டு நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிறார் என நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாரதி ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழக முதல்வர் கடந்த ஐந்து வருடத்தில் மத்திய அரசு ஏதாவது தந்து இருக்கு என்று சொல்லி இருக்கிறார்களா இதுவரைக்கும் சொல்லியதில்லை. தூத்துக்குடி விமான நிலையம் 350 கோடி ரூபாய் திருச்சி விமான நிலையம் 650 கோடி ரூபாய் பதினோரு வந்த பாரத் ரயில்கள் பட்ஜெட்டுக்கு முன்பு 11 மருத்துவக் கல்லூரிகள் ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் நான் பிரதமரை சந்தித்து வாங்கி வந்து உள்ளேன் என கூறியிருக்கிறாரா ஏதாவது வேண்டுமென்று இவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்களா? தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கொடுக்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் மத்திய அரசு இன்று இலவசமாக கொடுக்கிறார்கள் ஸ்டிக்கர் ஒட்டி இன்றைக்கு தாங்கள் கொடுப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். 

இன்றைக்கு எல்லோருக்கும் வீடு கொடுக்கிறார்கள், பாரதப் பிரதமருடைய வீடு அதில் மத்திய அரசு பங்கு 60% திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன சொன்னார்கள். சொத்து வரியை கூட்ட மாட்டோம் என்று கூறினார்கள். சொத்து வரியை 300 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள். இன்றைக்கு 300 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தியுள்ளார்கள். வீட்டு வரி உயர்வு என அனைத்தையும் கூட்டிவிட்டு எதுவுமே தரவில்லை எதுவுமே தரவில்லை என்று கூறுகிறார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்புதமான முறையில் தந்துள்ளார். ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் ஏற்படுத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூறியுள்ளார். இதுவரை இல்லாத வகையில் கனிம வளங்களை கண்டறிந்து அதை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடும் என கூறியுள்ளனர். மருத்துவத்துறைக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்கள் அதிலிருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தொகை என்று பிரித்து கொடுப்பார்கள். ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று கூறி இருக்கிறார்கள். மகளிருக்காக மாவட்டம் தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக விடுதிகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். செமி கண்டக்டரை பொறுத்தவரை 40 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள். செவி கண்டக்டர் தான் உலக அளவில் பொருளாதாரத்தை கட்டமைக்கும் அதற்கு நாற்பதாயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள், பின்னர் அதை பிரித்துக் கொடுப்பார்கள். பட்ஜெட்டை படித்து பார்க்காமல் பட்ஜெட் உள்ளே என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்கள் ஒண்ணுமே இல்லை, ஒண்ணுமே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருப்பார்கள். ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவார்கள். தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். இன்றைக்கு மூன்றாவது ஆண்டு துவக்க விழாவில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் தமிழகத்தின் கலாச்சாரம் தெரியாமல் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். நடனமாடிக் கொண்டிருந்தால் நடனமாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்” என்றார்.