பாஜகவுடன் தவெக கூட்டணியா?- நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்

 
Nainar Nagendran

பாரதிய ஜனதா கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சிக்கு எதிர்வரும் 11ஆம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ளார் அது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் கும்பகோணத்தில் இன்று நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், பாரதிய ஜனதா கட்சி - தமிழக வெற்றி கழகத்துடன் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என நைனார் நாகேந்திரன் தெரிவித்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பலமுறை தமிழகத்திற்கு வந்துள்ளனர். தமிழகத்திற்கு பல லட்ச ரூபாய்க்கான திட்டங்களை தீட்டி அமுல்படுத்தி உள்ளதாகவும் , தமிழ் மொழி வளர்ச்சிக்காக உலகம் எங்கும் பேசி வருவதாகவும் நைனார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மொழி வளர்ச்சிக்காக பேசி வருகிறீர்கள் என்கிறீர்கள், ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக போதிய நிதியை ஒதுக்கவில்லையே என செய்தியாளர்கள் எதிர் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பது போல் உள்ளது என்றும் எங்கள் கட்சி தொடர்பான செய்திகள் தொலைக்காட்சியில் அதிகம் வருவதில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் கஞ்சா அதிகளவில் புழக்கத்தில் உள்ளது என்றும் நைனார் நாகேந்திரன் தெரிவித்தார். எதிர் வரும் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகிறார். பிரதமர் மோடி திருச்சிக்கு வரும்போது அதிக மக்கள் வரவேண்டும் என்பதற்காக இன்று மதியம் கும்பகோணத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.