“மோடிக்கு மக்கள் ஆதரவு அதிகம், சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை”- நயினார் நாகேந்திரன்
புதியவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ஜனநாயகத்தில் அவர்களுக்கு உரிமையும் கடமையும் உள்ளது ஆனால் யார் நன்மை செய்வார்கள் என்று மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மறைமுகமாக சாடினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற முழக்கத்துடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கள்ளக்குறிச்சியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தமிழையும் தமிழர் கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி அதிகம் நேசிப்பதால் அவருக்கு தமிழக மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது.அதனை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை நாட்டின் நன்மைக்காக ஏற்பட்ட கூட்டணி, கஞ்சா இல்லாத பாலியல் இல்லாத லாக்கப் டெத் இல்லாத குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பவர்களை இதற்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது புதியவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம், யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ஜனநாயகத்தில் அவர்களுக்கு உரிமையும், கடமையும் உள்ளது. ஆனால் மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்று சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை மறைமுகமாக சாடி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். முன்னதாக மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தவுடன் ஏராளமான பெண்கள் சாரை சாரையாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


