பாஜகவில் இனிமேல் வார் ரூம், அரசியல் இருக்க கூடாது- நயினார் நாகேந்திரன்

 
ன் ன்

பாஜகவில் இருந்து கொண்டு அதிமுகவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜகவின் ஊடகப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள செயல்பாட்டாளர்களுக்கு பாஜக  மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்

பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை கமலாலயத்தில் நடைபெற்றது.  அந்த ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவை தொடர்ந்து விமர்சித்துவரும் , அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட பாஜகவினரின் 15 சமூக வலைதள கணக்குகளை குறிப்பிட்டு பேசிய நயினார் நாகேந்திரன், “இந்த 15 எக்ஸ் வலைதள கணக்குகளும் அண்ணாமலை படத்துடன் , அண்ணாமலைக்கு ஆதரவாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து எழுதி வருபவை. பாஜகவினரின் சமூக வலைதள செயல்பாடுகளை கண்காணிக்க புதிதாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

MEN (( Media empower  network )) என்று பெயரிடப்பட்டுள்ள குழு மூலம் பாஜகவினர் பங்கேற்கும் ஊடக விவாதம்,  சமூக வலைதள பதிவுகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர். பாஜகவில் இருக்கும் எந்த தனி நபருக்கும் ஆதரவாக , மற்ற நிர்வாகிகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது. பாஜகவில் இருந்து கொண்டு அதிமுகவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவுறுத்தினார்.