பாஜக, தமிழிசை கையில் புதுச்சேரி நிர்வாகம்- நாராயணசாமி

 
Narayanasamy tamilisai soundararajan

புதுச்சேரியில் நடந்த பழங்குடியினர் விழாவில் பழங்குடியினர் கவுரவிக்கப்படவில்லை, ஆனால் அவர்களை தரையில் அமரவைத்து அவமதித்துள்ளனர். இது என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக அரசின் வக்கிரபுத்தியை காட்டுகிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.

Narayanasamy

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “5 மாநில தேர்தல்கள் நடந்துகொண்டு வருகிறது. நடக்கவுள்ள 5 மாநில தேர்தல்களில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெரும். இது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி. பாராளுமன்ற தோர்தலோடு மோடி வீட்டுக்கு அனுப்பபடுவார். தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறி உடனே 10 கோப்புகளை ஆளுநர் ரவி உச்சநீதிமன்ற உத்தரவை பார்த்து பயந்து சுய கவுரவத்தை பாதுகாத்துகொள்ள ஆளுநர் ரவி தமிழக அரசு சார்பில் வைத்திருந்த கோப்புகளை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முடிவுதான் இறுதியானது என உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

புதுச்சேரியில் நடந்த பழங்குடியினர் விழாவில் பழங்குடியினர் கவுரவிக்கப்படவில்லை. ஆனால் அவர்களை தரையில் அமரவைத்து அவமதித்துள்ளனர். இது என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசின் வக்கிரபுத்தியை காட்டுகிறது. இந்த அரசு ஏழை மக்களை அவமதித்து வருகிறது. நிர்வாகத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசையும் பாஜகவும் கையில் எடுத்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் அடிச்சுவடியே இல்லாமல் போய்விட்டது. எதிர்த்து பேசினால் நாற்காலி காலியாகிவிடும் என ரங்கசாமிக்கு தெரியும். அதனால் தான் அவர் எல்லா விஷயங்களிலும் மவுனம் காக்கிறார். பெயருக்கு தான் கூட்டணி ஆனால் பாஜக ஆட்சிதான் நடக்கிறது.


புதுச்சேரி காரைக்கால் பகுதியில் மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இந்த ஆட்சியில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். விவசாய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. காலாப்பட்டு ரசாயன தொழிற்சாலை விபத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் விபத்து குறித்து முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. பல முறைகேடுகள் இந்த தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. சாசன் நிறுவனத்திற்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.