“மக்களின் வரிச்சுமை குறைந்துள்ளது! ஆனால் மோடியை பாராட்ட மனவில்லை”- நிர்மலா சீதாராமன்

 
ச் ச்

140 கோடி பேர் மீதும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் தாக்கம் இருக்கும். எனவே மக்களின் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Image

சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், “140 கோடி பேர் மீதும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் தாக்கம் இருக்கும். எனவே மக்களின் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்திருப்பது மிகப்பெரிய வெற்றி இது. ஜிஎஸ்டி மூலம் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்துள்ளது. மாநிலங்கள் சேர்ந்துதான் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு நாள் பிரதமர் அழைத்து, ஜிஎஸ்டி குறித்து பல விமர்சனங்கள் வருகிறது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனக் கூறினார். 8 மாதங்களாக எல்லா பொருட்களையும் ஆய்வு செய்து வருமான வரியை மாற்றி அமைத்தோம்.

ஜி.எஸ்.டி அமலானபோது வரி செலுத்துவோர் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்த நிலையில், 8 ஆண்டுகளில் 1.50 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பில் மாநிலங்களுக்கு அதிக பங்கு உண்டு. ஆனால் பிரதமரை பாராட்ட சிலருக்கு மனம் வருவதில்லை. ஜிஎஸ்டியால் ஒரு மாதத்திற்கு ரூ.1.9 லட்சம் கோடி வரி கிடைக்கிறது. அதில் 23% தான் மத்திய அரசுக்கு கிடைக்கும். 77% மாநிலங்களுக்குதான் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.” என்றார்.