அண்ணாமலை மீது பாஜக மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு?

 
அண்ணாமலை அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனித்து செயல்படுவதாக பாஜக மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னையில் RSS அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்தலைவர்கள் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல், பாஜக உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனித்து செயல்படுவதாக பாஜக மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையே கருத்து முரண்பாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், காலையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத அண்ணாமலை, இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். சமீபத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த 6 தொகுதிகளுக்கான தேர்தல் குழு பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். சென்னையில் நடைபெற்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், அண்ணாமலை விலகியது குறித்து விவாதிக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.