மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணியா? உயர்மட்ட குழுக்கூட்டத்தில் பரபரப்பு ஆலோசனை

 
ச்

அதிமுக கூட்டணி  பற்றி எந்தக் கருத்தும் கூறக்கூடாது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கண்டிப்புடன் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில் அதிமுக - பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்கும் முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனொரு பகுதியாக சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, தமிழிசை செளந்தரராஜன், கரு நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது. அதேபோல் கூட்டணி விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது என 
பாஜக உயர்மட்ட குழு நிர்வாகிகளுக்கு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.