விஜய்யை பார்த்து திமுக அரசு பயப்படுகிறது- தமிழிசை
விஜய்யை பார்த்து தமிழக அரசு பயந்திருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.’
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு பேருந்துகளை அனுப்புகின்ற உரிமையாளர்களை திமுக மிரட்டுவதாக தகவல் வருகிறது தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு திமுகவினர் தொல்லை கொடுக்கின்றனர். விஜய்யை பார்த்து தமிழக அரசுக்கு அச்சம். காங்கிரஸ் கட்சி தெளிவான வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது, வயநாடு தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரசில் தகுதியான பலர் இருந்தும் பிரியங்காவை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். நம்பிக்கையுடன் வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களை ஏமாற்றியவர் ராகுல்காந்தி.
இது அண்ணா வளர்த்த தமிழல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ். பெண்கள் முன்னேற்றத்திற்கு முழு உரிமையையும் திமுக எடுத்துக்கொள்ள கூடாது. அண்ணா, பெரியார் மட்டும்தான் போராடுனாங்களா? பாரதியார் சொல்லாத பெண்ணுரிமையை அண்ணா, பெரியார் செய்தார்களா?... பெரியாருக்கும், அண்ணாவுக்கும் உள்ள பங்கை விட தமிழ்நாட்டில் பலர் முக்கிய பங்காற்றியுள்ளனர். திமுகவோடு, கூட்டணி் கட்சிகள் இணக்கமான சூழ்நிலையில் இல்லை. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், வேல்முருகன் உள்ளிட்டோர் திமுகவுக்கு எதிராக கருத்துக்களை கூறிவருகின்றனர்.” என்றார்.