அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த அழுத்தமும் இல்லை: தமிழிசை செளந்தரராஜன்
அதிமுகவுடன் பாஜக presure கூட்டணி அல்ல pleaser கூட்டணி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு நடத்தப்படாது என கூறினர். அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று 5 வது நீட் தேர்வு நடக்கிறது, திமுகவை எதிர்த்து நீட் தேர்வு - நீட்டாக நடக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த அழுத்தமும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தான் பிரஷர் உள்ளது. தமிழக பள்ளிகளில் சாதி பாகுபாடும், அரிவாள் கலாச்சாரமும் உருவாகியுள்ளது. 3, 5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி எதுவும் தெரியாமல் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் பேசுகிறார். மாணவர்களின் படிப்பில் அரசியலை கலக்க வேண்டாம். பொய்யாமொழி என்று பெயர் வைத்திருக்கும் அமைச்சர் பொய் சொல்லாமல் உண்மையை சொல்ல வேண்டும். அதிமுக- பாஜக கூட்டணியை கண்டு திமுக பதறுகிறது. விஜய்யும், அதிமுக- பாஜகவும் திமுக எதிர்ப்பு டீம்.
இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு 30 உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாளை தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்பாட்டம் நடத்த உள்ளது. நாளை மாலை சென்னையில் நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார். அதே போல் கோவையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார். பாகிஸ்தான் விசா முடக்கப்படவில்லை மாறாக தீவிரவாதம் தான் முடக்கப்படுகிறது. முன்னாள் ஐஏஎஸ் சகாயம் மற்றும் மதுரை ஆதினம் ஆகியோருக்கபாதுகாப்பு இல்லை. யாருக்குமே குறிப்பாக காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை”
என்றார்.


