அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் கூற முடியாது - தமிழிசை
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள MG ரோடு பகுதியில் புதிய GST வரிக்குறைப்பு குறித்த விழிப்புணர்வு பற்றி நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். மேலும் அங்குள்ள ஆவின் பாலகத்தில் பால் சார்ந்த பொருட்களுக்கு புதிதாக குறைக்கப்பட்ட விலைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , ஜிஎஸ்டி வரி குறைப்பை அறிவித்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் , இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பினால் ஒரு சராசரி குடும்பத்திற்கு வருடம் 50 ஆயிரம் வரையும் மாதம் 5 ஆயிரம் வரையும் சேமிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார். அதனால்தான் பிரதமர் இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பை சேமிப்பு திருவிழா என்று கூறியதாக தெரிவித்தார். இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பு வாழ்வாதாரத்தை பொருளாதாரத்தை நடுத்தர குடும்பங்களுக்கு மேம்படுத்தி உள்ளதாக கூறினார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் பால் முகவர்கள் விவசாயிகள் நன்றி தெரிவித்து விட்டார்கள் என்றும் ஆனால் ஆவினில் இன்னும் பால் விலையை குறைக்கப்படவில்லை என்றும் அதற்கான நிர்வாக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இருப்பு இருப்பதால் பால் விலை குறைக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள் ஆனால் மருந்து பொருட்கள் இருப்பு இருந்த போதும் அதன் விலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் முதலமைச்சரை கண்டிப்பதாக தெரிவித்தார். எட்டு வருடத்திற்கு முன்பாக இந்த வரிக்குறைப்பை ஏன் அமல்படுத்தவில்லை என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். ஆனால் ஜிஎஸ்டி என்பது புதிய வரி இல்லை என்றும் ஜிஎஸ்டிக்கு முன்பாக வரி என்பது பல்வேறு முறைகளில் இருந்ததாகவும் யுபிஏ அரசாங்கம் இருந்தபோது இதேபோன்று பல்வேறு வரிகள் இருந்ததாகவும் அப்போது ஆட்சியில் பங்கு வகித்த திமுக ஏன் எதிர்க்கவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஜிஎஸ்டிக்கு முன்பாக 17 வகையான வரிகள் இருந்தது என்றார். ஜிஎஸ்டிக்கு முன்பாக வெவ்வேறு மாநிலங்களில் வேறு வேறு வரி இருந்ததாகவும். தான் மருத்துவ பயிற்சி மேற்கொள்ளும்போது மருத்துவ உபகரணங்களை பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வருவதாகவும் ஆனால் தற்போது அது போன்ற எந்த ஒரு நடைமுறை சிக்கல்களும் இல்லை என்று அவர் தெரிவித்தார். தமிழக அரசு தினமும் ஒரு செயலியை அறிமுகப்படுத்துகிறது. செயலி இருக்கிறதே தவிர செயல்பாடுகள் இல்லை என்று புதிதாக அறிமுகப்படுத்தும் அரசு செயல்களை விமர்சித்தார். முதலமைச்சரின் இந்த சமூக வலைதள பதிவுகள் அனைத்துமே வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

மருந்து மட்டுமன்றி மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வறையை முழுமையாக குறைக்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , வரிக்குறிப்பு என்பது தற்போது தான் ஆரம்பமாகியுள்ளதாகவும் முன்பெல்லாம் உணவுப் பொருட்களுக்கும் உணவிற்கும் வேறு வேறு வழியாக இருந்தது ஆனால் தற்போது அனைத்தும் ஒரே வழியாக மாறிவிட்டது முன்பெல்லாம் மருத்துவ உபகரணங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்போது இந்தியாவிலேயே மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார். படிப்படியாக மருத்துவ உபகரணங்களுக்கும் வரி குறைக்கப்படுவார்கள் மருத்துவ காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரி முழுமையாக நீக்க ப்பட்டுள்ளது எனக்கு கூறினார்.
NDA கூட்டணியை ஒன்றிணைக்கும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டு வருவது தொடர்பான கேள்விக்கு, இதற்கு நான் பதில் சொல்ல முடியாது என்றும், அவர் அவர்களுக்கு இன்று ஒரு வேலை இருக்கிறது நான் கட்சித் தலைவர் இல்லை என்றும் கட்சி என்ன சொல்கிறதோ அதை நான் கேட்பேன் என்று கூறினார். கடந்த ஒரு வார காலமாக நான் எடுத்துக் கொண்ட பணி என்பது ஜிஎஸ்டி வரி குறைப்பை மக்களிடம் கொண்டு செல்வதையும் ஜிஎஸ்டி சுற்றுலாவாக செல்வதாக கூறினார். மேலும் அரசியல் தொடர்பான கேள்விக்கு இன்று பதில் அளிக்க மாட்டேன் என்றும் கூறினார் .


