முதல்வரை சைனீஸ் மொழியில் வாழ்த்திய பாஜக

 
tn

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மற்றும்  முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி  அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

tn

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
 


இந்நிலையில் தமிழக பாஜக சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு சைனீஸ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் தமிழ்நாடு @BJP4 சார்பில் நமது மாண்புமிகு முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு பிடித்த மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும்! சீனாவின் ஆட்சி மொழியான மாண்டரின் மொழியில்  முதல்வருக்கு  வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் இதைப் பயன்படுத்தவும்:

穆图维尔
卡鲁纳尼蒂
斯大林生日快乐

我们祝您健康长寿

(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டாலின்! நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள்!)

என்று குறிப்பிட்டுள்ளது.