யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? - பத்திரிகையாளர்களை மிரட்டிய அண்ணாமலை

 
tn

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அண்ணாமலை பத்திரிகையாளர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திநகரில் உள்ள  கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான காரணத்தை காவல்துறை தெரிவிக்க வேண்டும் .புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன .ராகுல் காந்தியின் யாத்திரை கேலியாக உள்ளது. தேசத்தில் பிரிவு ஏற்படுத்தும் நபர்களோடு தான் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார் என்றார்.

annamalai

தொடர்ந்து பேசிய அவர்  காயத்ரி ரகுராம் விலகல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, " என்னுடைய பாலிசி கட்சியிலிருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதே எனது வாடிக்கை. எங்கு சென்றாலும் அவர்கள் நல்லா இருக்கட்டும். வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் கிடைக்கணும் . கட்சியிலிருந்து வெளியே செல்வோர் என்னையோ,  கட்சியையோ  புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மகளிர் அதிக அளவில் பாஜகவை நோக்கி வருகிறார்கள். யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என கட்சியை விட்டுப் போகிறார்கள் என்றால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது "என்றார்.

annamalai and gayathri

இந்த சூழலில் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களிடம் அண்ணாமலை திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளரை ஒருமையில் பேசிய அவர் யூடியூப் சேனலை எல்லாம் யார் உள்ளே விட்டது.  யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? 40 ஆயிரம் ரூபாய்க்கு கேமரா , நான்கு லைக்குகளை வைத்துக்கொண்டு நீ என்னிடம் கேள்வி கேட்பாயா ?என அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.