குடும்ப அரசியல் நடத்தும் ஸ்டாலின் உருவாக்கியிருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது?

 
annamalai stalin

குடும்ப அரசியல் நடத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கியிருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று தமிழகத்தில் ஊழல் என்பது எல்லை மீறிச் சென்று கொண்டு கொண்டே இருக்கிறது. திறமையான அதிகாரிகள் என்று தன்னைச் சுற்றி ஒரு பிம்ப  மயக்கத்தை உருவாக்கி இன்று அனைவருக்கும் பங்கு என்று மாற்றிய பெருமை உங்களையே சேரும்.  நீங்கள்தான் இன்று அனைவருக்கும் சம உரிமை என்று கவலையாக வசனம் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.  கடந்த சில மாதங்களாக திமுகவிற்கு அதிக விசுவாசத்தோடு இருக்கும் சில பத்திரிகையாளர்கள் ஒரு செய்தி வெவ்வேறு விதமான வார்த்தைகள் கொண்டு மாற்றி மாற்றி எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் எதார்த்த உண்மை போன்ற எதையும் மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக திரைப்பட வசனம் போலவே தலைப்புச் செய்திகளாக மாற்றி கொண்டு இருக்கின்றார்கள்.  வட இந்தியாவின் எதிர்க்கட்சி வெற்றிடத்தை முதல்வர் முக ஸ்டாலின் நிரப்புவார். இதன் நேரடியான அர்த்தம் பாரதப் பிரதமர் மோடி அவர்களை எதிர்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேரும். இங்கு ஊடகங்களின் மூலம் உருவாக்கப்படும் மாற்றங்கள், ஒன்று; இரண்டல்ல. 

stalin

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வரப்போகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளுக்கு தலைமையேற்று வழி காட்ட தயாராக இருக்கின்றார் என்பதாகவே செய்திகள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன.  இப்போது அதன் தொடர்ச்சியாக மற்றொரு காட்சி சமூகநீதி கூட்டமைப்பு.  கலைஞர் அரசியல் என்பது ஆட்சியில் இருந்தால் பேசுவது என்று எதிர்க் கட்சியாக இருந்தால் நடந்து கொள்வது வேறு. கச்சிதமாக அப்பாவைப் போலவே நீங்களும் அந்த பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறீர்கள்.  குடும்பம் மாவட்டங்களாக பிரித்து பரம்பரையாக ஆளும் மாவட்டச் செயலாளர்களின் கொண்ட திமுக சமூக நீதி பற்றிய பேசுவதே பெரும் நகைச்சுவை.  ஸ்டாலின் கடிதம் எழுதிய கட்சியினர் அந்தந்த மாநிலங்களை ஆண்ட காலத்திலும்,  மோடி ஆண்ட காலத்திலும் ஒப்பிட்டுப் பார்த்தால் கடந்த 7 வருடங்களில் தான் கழிப்பறை ,குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்ந்துள்ளது. இதுதான் அனைவருக்குமான சமூகநீதியே தவிர,  திமுகவின் சாதிப்பிரிவினை அரசியல் அல்ல.

annamalai

மன்னிக்கவும் இது 1996இல் அல்ல 2022 புதிய பாராளுமன்றம், புதிய தொழில்நுட்ப காலம் என்று மோடி அவர்களின் உழைப்பால் இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அனைவருக்கும் பொதுவான இந்தியா ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறோம்.  புது சுவாசத்தில் நான் இந்தியன் என்ற தேசிய சிந்தனையின் அடித்தளம் வலிமை அடைந்துள்ளது என்பதை பாஜகவின் அடிமட்ட தொண்டன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  தெரியாதவர்கள் நீண்ட நாட்களுக்கு காரணம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நீட் குறித்து திமுக உருவாக்கிய நாடகம் இன்று ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதோடு, உங்கள் நாடகம் முடிவுக்கு வந்து உள்ளது ,உங்கள் தமையன்  சொன்ன ரகசியம் இனியாவது வெளியே வரும்.  அடுத்த வேடத்தை அணிய தொடங்கி இருக்கிறீர்கள் " என்று குறிப்பிட்டுள்ளார்.