ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேச வேண்டும் என நினைக்கின்றனர்- வானதி சீனிவாசன்

 
vanathi srinivasan

ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேச வேண்டும் என தமிழக அரசில் இருப்பவர்கள் நினைக்கின்றனர், அது நடக்காது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  

மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது- வானதி சீனிவாசன் | vanathi  srinivasan says corruption person cannot escape in Modi regime

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹாலில் தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் வளரக்கூடிய 100 பெண் குழந்தைகளுடன் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தீபாவளி கொண்டாடினார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மோடியின் மகள் என்ற திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தபட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுடன் தீபாவளி பரிசுகளோடு தீபாவளி கொண்டாடப்பட்டு வருகின்றது. தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதால், தீபாவளி கொண்டாட்டம், பரிசுகளுடன், “குட் டச்” “பேட் டச்” குறித்து வகுப்புகள் எடுக்கப்படுகிறது. 

நடிகை ராஷ்மிகா போல தொழில் நுட்பத்தை பயன்படுத்தி “டீப் பேக்” புகைப்படம் தவறாக பயன்படுத்தபடுகின்றது. இதில் பிரபலங்கள் மட்டுமின்றி சாதான பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது இதனால் அவமானபடுவது நாம் அல்ல. சரியான முறையில் உடனிருப்பவர்களுடன் பேசி, மன உறுதியை வளர்த்து கொள்ள வேண்டும். காவல் துறையில் தொழில் நுட்ப குழுக்களை பலப்படுத்த வேண்டும், சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தகவல் தொழில் நுட்ப சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசுடன் மகளிர் அணி தலைவராக என்ற முறையில் பேசிய உரிய முயற்சி எடுப்பேன். அதே போல குற்றங்களில் 50 சதவீதம் பெண்கள் வெளியில் சொல்வதில்லை என்பதால் குற்றவாளிகளுக்கு தைரியம் கிடைக்கிறது. கால விரயம் என்பதாலும் பெண்கள் செல்லுவதில்லை. 

காங்கிரஸ்காரர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்” - வானதி ஸ்ரீனிவாசன் | nakkheeran

மிசோரத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பாஜக போட்டியிடுகின்றது. வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆதரவு உயர்ந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் இன குழுக்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளுக்கு பாஜக காரணமில்லை என அவர்களுக்கு தெரியும். தொழில் துறையினருக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பா.ஜ.க தொழில் துறையினருக்கு ஆதரவாக இருக்கும். ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேச வேண்டும் என தமிழக அரசில் இருப்பவர்கள் நினைக்கின்றனர், அது நடக்காது. உங்கள் சித்தாந்தங்களை அவர் பேச வேண்டும் என நினைக்க கூடாது. அவர் சித்தாந்தை அவர் பேசுகின்றார். உங்கள் சித்தாந்ததை நீங்கள் பேசுங்கள்.கவர்னரின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட கூடாது” என தெரிவித்தார்.