அரசியல் அதிகாரத்தில் உள்ள பெண்களை பார்த்தால் உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல்? ஈவிகேஎஸ்க்கு வானதி கேள்வி

 
Vanathi seenivasan

பெண்களை அடிமைகளாக முன்னிறுத்த முயலும் உங்கள் பிற்போக்குத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

EVKS Elangovan Health Status | சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்  நிலை: அப்டேட் கொடுத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Tamil Nadu News in  Tamil

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “இந்தியாவின் நிதி பொருளாதாரத்தை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள நமது மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களைப் பார்த்து, “ஒரு பெண் அமைச்சருக்கு அடக்கமும் பணிவும் தேவை” என்று நீங்கள் கூறுவது, நமது நாட்டில் சம உரிமையும் அரசியல் அதிகாரமும் பெரும் பெண்களைப் பார்த்தால் உங்களுக்கு எத்தனை வயிற்றெரிச்சலாக இருக்கிறது என்பதைக் கோடிட்டு காட்டுகிறது. ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்க நீங்கள் யார்?

அரசியல் கட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை- வானதி சீனிவாசன்- Vanathi  Srinivasan says There is no security for political party leaders

அரசு பொறுப்பிலிருக்கும் ஒரு பெண்ணையே சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சிக்கும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால், சாமானிய பெண்களை எப்படி நடத்துவீர்கள்? அரசியல் அதிகாரமிக்க பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணுக்கு அடக்கம் தேவை என்ற உங்களின் கூற்று, உங்கள் கட்சியைச் சார்ந்த திருமதி. சோனியா காந்தி அம்மையார் உட்பட  அனைத்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி பெண் தலைவர்களுக்கும் பொருந்துமா? ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்தாமல், பெண்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த காங்கிரசை சேர்ந்த நீங்கள் இப்படி பேசுவது ஒன்றும் வியப்பல்ல. எனவே, மதிப்புமிக்க பொறுப்பில் இருக்கும் நமது மத்திய நிதியமைச்சரைப் பற்றி பொதுவெளியில் நீங்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு, உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.