“கள்ள ஓட்டு போடலாம் என ரூம் போட்டு அதற்கு ஒரு குழு அமைத்து யோசித்து கொண்டிருப்பார்கள்”- வானதி சீனிவாசன்
SIR நடவடிக்கையின் மூலம் தமிழகத்தில் போலி வாக்காளர்கள் களையெடுக்கப்பட்டுவிட்டார்கள். இதே போன்று விடியா திமுக அரசும் தமிழகத்திலிருந்து களையெடுக்கப்படும் காலமும் வெகு தொலைவில் இல்லை என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “SIR நடவடிக்கையின் மூலம் தமிழகத்தில் போலி வாக்காளர்கள் களையெடுக்கப்பட்டுவிட்டார்கள். இதே போன்று விடியா திமுக அரசும் தமிழகத்திலிருந்து களையெடுக்கப்படும் காலமும் வெகு தொலைவில் இல்லை..! அடுத்ததாக எப்படி கள்ள ஓட்டுப் போடலாம் என்று ரூம் போட்டு அதற்கு ஒரு குழு அமைத்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். வாக்காளர்களே விழிப்புடன் இருப்போம்..! தமிழகத்தினை தீய சக்தி திமுக-விடமிருந்து மீட்போம்..! சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டு ஜனநாயகத்தை மீட்ட தேர்தல் ஆணையத்திற்கு நன்றி..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


