தனி அணியாக களம் காணும் பாஜக?

 
tn

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தொகுதி பங்கீடு , கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

Annamalai

இந்நிலையில் அதிமுக உடன் மறைமுகமாக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால், மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தனி அணியாக போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Annamalai

20 தொகுதிகளில் பாஜகவும் மீதமுள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ளன.