ரஜினிக்கு பதிலாக வடிவேலு...வாயில் வடை சுட்ட ப்ளூ சட்டை மாறன் ; கடுப்பான ரசிகர்கள்

 
tn

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பற்றி  ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து கிண்டல் செய்து வந்த நிலையில்,  பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளையும் ட்ரோல் செய்து வந்தார். இந்த சூழலில்  ப்ளூ சட்டை மாறன் தான் நடிகர் ரஜினிகாந்தை தனிப்பட்ட முறையில் அவரது இணைய ரசிகர்களுடன் சந்தித்ததாகவும், அப்போது சில கசப்பான சம்பவங்கள் நடந்ததாகவும்,  இச்சம்பவம் பற்றிய வீடியோவை தான் காலை 11 மணிக்கு ஷேர் செய்வதாகவும் இன்று காலை அறிவித்திருந்தார். இந்த  பதிவு இணையத்தில் பேசும் பொருளானது.

tn

இந்நிலையில் சினிமா  விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த் உடன் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட எந்த வீடியோவும் வெளியிடவில்லை . அதற்கு மாற்றாக வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அந்த காட்சியில் ஹோட்டலில் சாப்பிடும் பலர் அடுத்தடுத்து வருபவர்களிடம் பில் கட்ட கூற இறுதியாக வடிவேலு சிக்கிக் கொள்வது போல காட்சி அமைந்துள்ளது.  



இதை கண்ட இணையதளவாசிகள் பலர்  ப்ளூ சட்டை மாறனை சரமாரியாக திட்டி வருகின்றனர். ஆனால் அதற்கு பதில் அளித்துள்ள அவர் , இதுக்கு முன்னாடி அவரோட படம் வந்தப்ப Social media influencers and youtuber களை.. அவர் அழைச்சி பேசுனது உண்மையா இல்லையா? அதுல பலரும் இனி உங்களுக்கு சொம்படிக்கறது உறுதின்னு வாக்கு குடுத்தாங்களா இல்லையா?  இது மீமா இருந்தாலும் நிஜத்துல நடந்த உண்மைதான? அப்பறம் எதுக்கு அதிர்ச்சி அடைஞ்சி ஏமாந்து போகனும்? என்று பதிலளித்துள்ளார்.