சிறுத்தை கவ்விச் சென்ற 4 வயது குழந்தை சடலமாக மீட்பு
Jun 21, 2025, 12:31 IST1750489262905
சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் மீட்பு கோவை வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி 18 மணிநேர தேடுதலுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே ஜார்க்கண்ட் மாநில தம்பதி மனோஜ்- மோனிகாவின் 4 வயது குழந்தை ரோஷினி நின்றுகொண்டிருந்தது. அப்போது அங்குவந்த சிறுத்தை ரோஷினியை கவ்வி சென்றது. மனோஜ்- மோனிகா இருவரும் புலம்பெயர் தொழிலாளர்களாவர். மோப்பநாய் மற்றும் ட்ரோன் உதவியுடன் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முதல் தேடி வந்த நிலையில், வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தாய் கண் முன்னே சிறுத்தை 4 வயது குழந்தையை தூக்கி சென்றது. இன்று காலை சிறுமியின் உடை கிழிந்த நிலையில் கிடைத்தது.


