நடிகை வனிதா விஜயகுமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

 
vanitha vanitha

நடிகை வனிதா விஜயகுமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவாதம் செய்வதை நிறுத்துங்கள்... பயணம் தொடரும்” -வனிதா விஜயகுமார்

சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை வனிதா விஜயகுமார் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக நடிகை வனிதா விஜயகுமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடப்பட்டது. இதனை அடுத்து ஆவடி காவல் ஆணையராக வெடிகுண்டு நிபுணர்கள் போரூரில் உள்ள வனிதா விஜயகுமார் வீட்டிற்கு சென்றனர். மோப்பநாய் வெடிகுண்டு சோதனை கருவிகள் கொண்டு தீவிரமாக சோதனை செய்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. சுமார் ஒன்றரை மணி நேர தேடுதலுக்கு பின்பு வெடிகுண்டு மிரட்டல் புரளி என  போலீசார் உறுதி செய்தனர்,