முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர வைக்கும் காரணம்!!

 
stalin

 முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

arrested

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மற்றும் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று முன்தினம் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.  தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அழைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் இரு வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  இதில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது.  அத்துடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

men arrest

விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் திருப்போரூரில்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து திருப்போரூர் சிறுதாவூர் அருகே உள்ள பொருந்தவாக்கம்  கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் ஐயப்பன் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியான இவர், தமிழக அரசு இலவச வீடு தர வேண்டுமென 2020ஆம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்தும்,  தற்போது வரை வீடு கிடைக்காத விரக்தியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.  அத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததால் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.